சினிமா செய்திகள்

நடிகர் அக்ஷய் குமார் கொடும்பாவி எரிப்பு...!

அக்ஷய் குமார் நடிப்பில் 'ஓ.எம்.ஜி. 2' படம் தயாராகி திரைக்கு வந்துள்ளது

தினத்தந்தி

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அக்ஷய் குமார் தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் 'ஓ.எம்.ஜி. 2' படம் தயாராகி திரைக்கு வந்துள்ளது.

பாலியல் கல்வியை போதிக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் இந்து கடவுள்களுக்கு எதிரான சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

படத்துக்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் அளித்தனர். இதுகுறித்து அக்ஷய் குமார் கூறும்போது, ''இது இளைஞர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள பாலியல் விழிப்புணர்வு படம். இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்து இருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது. யுஏ சான்றிதழ் கிடைத்து இருந்தால் இன்னும் நிறைய பேர் பார்த்து இருப்பார்கள்'' என்றார்.

இந்த நிலையில் வட மாநிலங்களில் ஓ.எம்.ஜி. 2 படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் இந்து அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர். படத்தை திரையிட கூடாது என்று கோஷங்கள் எழுப்பினர். அக்ஷய் குமாரின் உருவ கொடும்பாவியை எரித்தனர். தியேட்டர்களில் வைத்திருந்த படத்தின் போஸ்டர் பேனர்களை கிழித்தும் தீயிட்டு எரித்தனர். இது பரபரப்பானது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு