சினிமா செய்திகள்

வெற்றி மாறன் படத்தின் பாடலை வெளியிட்டார் நடிகர் ஆர்யா..!

'அனல் மேலே பனித்துளி' திரைப்படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தையும் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் 'வாடிவாசல்' படத்தையும் இயக்கி வருகிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவர் தயாரிப்பில் 'உதயம் என்எச்4', தனுஷின் 'கொடி' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'அனல் மேலே பனித்துளி'. இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை கெய்சர் ஆனந்த் எழுதி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் 'அனல் மேலே பனித்துளி' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'கீச்சே கீச்சே' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாடலாசிரியர் அறிவு எழுதி மீனாட்சி இளையராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்