சினிமா செய்திகள்

மதுவுக்கு அடிமையாகி மீண்ட நடிகை

தினத்தந்தி

பிரபல இந்தி நடிகை பூஜா பட். இவர் தமிழில் அஜித்குமாரின் கல்லூரி வாசல் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஏராளமான இந்தி படங்களை தயாரித்தும் இருக்கிறார். பூஜா பட் தனக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும் தற்போது குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு விட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பூஜா பட் அளித்துள்ள பேட்டியில், "நான் நீண்ட நாட்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தேன். எல்லோரும் என்னை குடிகாரி என்ற அழைத்து கேலி செய்தனர். இதனால் எனது 44 வது வயதில் குடிப்பழக்கத்தை விட்டு விட்டேன்.

இந்த சமூகம் ஆண்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுபோன்ற லைசென்ஸ் கொடுக்கிறது. ஆனால் பெண்களின் பேச்சை கேட்காது. ஆண்கள் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் பெருமையாக பேசுகிறார்கள். ஆனால் பெண்கள் நிலைமை வேறு. அவர்கள் குடிக்கிறோம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவே பயப்படுகின்றனர்.

அப்படி இருக்கும்போது குடிப்பழக்கத்தை விட்டு விட்டேன் என்று எப்படி சொல்வார்கள். என்னை பொறுத்தவரை நான் எல்லோரது முன்னிலையிலும் குடித்தேன். இப்போது அந்த பழக்கத்தை விட்டதையும் பகிரங்கமாக சொல்கிறேன். என்னை குடிகாரி என்று அழைப்பவர்களிடம் நான் அந்த பழக்கத்தை விட்டு விட்டேன் என்று சொல்லிக்கொண்டே வருகிறேன்'' என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை