சினிமா செய்திகள்

நடிகை சனாகானுக்கு ஆண் குழந்தை

தமிழில் சிம்புவின் 'சிலம்பாட்டம்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சனாகான். பரத் ஜோடியாக 'தம்பிக்கு இந்த ஊரு' மற்றும் 'பயணம்', 'ஆயிரம் விளக்கு', 'தலைவன்', 'ஈ', 'அயோக்யா' உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

சனாகான் கடந்த 2020-ல் முப்தி அனாஸ் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார். சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட சனாகானை அவரது கணவர் தரதரவென இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பானது.

கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இப்படி மோசமாக இழுத்துச் செல்கிறார்" என அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்த நிலையில், காற்றோட்டம் இல்லாத பகுதியில் நின்றதால் சோர்வாக உணர்ந்தேன். இதனால் தண்ணீர் குடிக்க கணவர் வேகமாக அழைத்து சென்றார் என்று விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் சனாகானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை வலைத்தளத்தில் அவர் தெரிவித்து உள்ளார். ரசிகர்கள் சனாகானுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்