சினிமா செய்திகள்

தெலுங்கில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஹனி ரோஸ்

ஹனி ரோஸ், புதிய தெலுங்கு திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ், கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ‘பாய் பிரண்ட்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.

தமிழில் ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘மல்லுக்கட்டு’, ‘கந்தர்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஹனி ரோஸ், தெலுங்கிலும் பல படங்களில் தோன்றியுள்ளார். குறிப்பாக நடிகர் பாலகிருஷ்ணா நடித்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படம் அவருக்கு அதிகளவிலான பிரபலத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹனி ரோஸ், புதிய தெலுங்கு திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், அந்தப் படத்தின் கதாநாயகன், இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை. இந்த அறிவிப்பு ஹனி ரோஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.