சினிமா செய்திகள்

61-வது படத்துக்கு தயாரான அஜித்

அஜித் நீளமான தாடி வளர்த்து கோட் சூட் கண்ணாடி அணிந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வரவேற்பை பெற்றது. மீண்டும் இவர்கள் கூட்டணியில் வலிமை படம் தயாராகி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் அடுத்து மூன்றாவது தடவையாக வினோத் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இது அவருக்கு 61-வது படம். போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படம் அதிரடி திகில் கதையம்சத்தில் தயாராக இருப்பதாகவும், இதில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என்றும் தகவல் பரவி உள்ளது. இதில் ஒரு வேடம் வில்லத்தனமான கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வாலி, பில்லா, வரலாறு, மங்காத்தா படங்களில் அஜித் வில்லத்தன வேடங்கள் ஏற்றுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஐதராபாத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அங்குள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் பிரமாண்ட அரங்கு அமைத்து வருகிறார்கள். தற்போது அஜித் நீளமான தாடி வளர்த்து கோட் சூட் கண்ணாடி அணிந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது 61-வது படத்துக்கான தோற்றமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்