சினிமா செய்திகள்

ரூ.15 கோடி நஷ்டத்தில் அக்‌ஷய் குமார் படம்

அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த மாதம் 25-ந்தேதி திரைக்கு வந்த ராம் சேது படமும் தோல்வியை சந்தித்து உள்ளது. இந்த படத்தை ரூ.90 கோடி செலவில் எடுத்து இருந்தனர். ஆனால் திரையரங்குகளில் ரூ.75 கோடி மட்டுமே வசூலித்தால் ரூ.15 கோடி நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படங்களாக வெளியாகி பெரிய அளவில் வசூல் பார்த்த பாகுபலி, கே.ஜி.எப், புஷ்பா படங்களுக்கு பிறகு நிறைய படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படங்களாக வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்டில் வெளியான பல பான் இந்தியா படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் ரூ.250 கோடி செலவில் தயாரான ராதே ஷியாம் ரூ.100 கோடி நஷ்டத்தை சந்தித்ததாகவும் ரன்பீர் கபூர், வாணிகபூர் ஆகியோர் நடிப்பில் ரூ.160 கோடி செலவில் தயாராகி திரைக்கு வந்த சம்ஷேரா ரூ.70 கோடி மட்டுமே வசூலித்ததாகவும் கூறுகிறார்கள். இதுபோல் அமீர்கான் நடிப்பில் ரூ.200 கோடி செலவில் தயாராகி திரைக்கு வந்த லால் சிங் சத்தா ரூ.50 கோடி கூட வசூல் செய்யவில்லை என்கின்றனர். இந்த நிலையில் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த மாதம் 25-ந்தேதி திரைக்கு வந்த ராம் சேது படமும் தோல்வியை சந்தித்து உள்ளது. இந்த படத்தை ரூ.90 கோடி செலவில் எடுத்து இருந்தனர். ஆனால் திரையரங்குகளில் ரூ.75 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்