சினிமா செய்திகள்

ஆலியா பட் வீட்டில் விசேஷம்... காதலரை கரம் பிடிக்கும் சகோதரி - வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்

ஆலியா பட் சமீபத்தில் 'ஜிக்ரா' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மும்பை,

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ஆலியா பட்டின் மூத்த சகோதரியும், பிரபல திரைக்கதை ஆசிரியருமான ஷாஹீன் பட், தனது நீண்ட நாள் காதலரான இஷான் மெஹ்ரியுடன் (Ishaan Mehra) நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த மகிழ்ச்சியான செய்தியை ஷாஹீன் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஆலியா பட்டின் சகோதரிக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

ஷாஹீனின் வருங்கால கணவர் இஷான் மெஹ்ரி ஒரு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர் (Sports and Fitness Coach). அவர் ஒரு சர்வதேச நீச்சல் வீரராக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆலியா பட் சமீபத்தில் 'ஜிக்ரா' திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' படத்தில் நடித்து வருகிறார்.