திருவண்ணாமலை,
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான அஞ்சலி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த தரிசனப் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.