சினிமா செய்திகள்

அரவிந்தசாமி-ரெஜினா ஜோடியுடன், ‘கள்ள பார்ட்’

‘கள்ள பார்ட்’ படத்தில் அரவிந்தசாமி ஜோடியாக ரெஜினா நடிக்கிறார்.

அரவிந்தசாமியும், ரெஜினாவும் முதல் முறையாக கள்ள பார்ட் என்ற படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். பி.ராஜபாண்டியின் திரைக்கதை-டைரக்ஷனில் படம் வளர்ந்து வருகிறது. இது அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படம். இதில் அரவிந்தசாமி ஹார்ட்வேர் என்ஜினீயராகவும், ரெஜினா நடன ஆசிரியையாகவும் நடித்து வருகிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் ராஜபாண்டி கூறுகிறார்:-

கள்ள பார்ட் படத்தில், அரவிந்தசாமி இதுவரை நடித்திராத வேடத்தில் நடிக்கிறார். தனி ஒருவன் படத்துக்கு நேர் மாறான கதாபாத்திரம், இது. மூளையை பயன்படுத்தி சாதுர்யமாக செயல்படுகிற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இந்த படம் அவருக்கு சிகரமாக இருக்கும். பார்த்தி என்ற புதிய வில்லன் அறிமுகமாகிறார். ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் குழந்தை நட்சத்திரம் மோனிகா ஆகியோரும் நடிக்கிறார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து இருக்கிறார்.

எஸ்.பார்த்தி, எஸ்.சீனா ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள். முழுக்க முழுக்க சென்னையில் வளரும் படம், இது. 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு