சினிமா செய்திகள்

திருமண வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட ஆர்யா- சாயிஷா ஜோடி

5-ம் ஆண்டு திருமண நாளை ஒட்டி, புகைப்படத்தை பகிர்ந்து மனைவி சாயிஷாவுக்கு நடிகர் ஆர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழில் 'கடைக்குட்டி சிங்கம்,' 'ஜுங்கா,' 'கஜினிகாந்த்,' 'காப்பான்', 'டெடி' ஆகிய படங்களில் நடித்துள்ள சாயிஷா தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 5ம் ஆண்டு திருமண நாளை வரவேற்கும் விதமாக சாயிஷா வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " என் வாழ்வின் அன்பிற்கு திருமண நாள் நல்வாழ்த்துகள். காலம் உங்களுடன் தான் பயணித்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு தெரிந்ததை விட நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " உன்னுடன் பகிர்ந்துகொண்டு கற்றுக்கொண்ட இந்த 5 வருடங்கள் அழகானவை; இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் என் அன்பே" என்று பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு