சினிமா செய்திகள்

மீண்டும் நாயகனாக சேரன்

தமிழ் திரையுலகில் பிரபல டைரக்டராகவும், கதாநாயகனாகவும் வலம் வந்த சேரன், சமீபகாலமாக படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது 'தமிழ்க்குடிமகன்' என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் டைரக்டு செய்துள்ளார். இதில் லால், எஸ்.ஏ, சந்திரசேகர், ஸ்ரீபிரியங்கா, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. சாதி சார்ந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை படத்தில் காட்டி இருக்கிறோம் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பட நிகழ்ச்சியில் சேரன் பேசும்போது, "அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும். புத்திசாலித்தனமான திரைப்படம் இது. சாதிகளை ஒழிக்க வேண்டும் என்பது போன்ற நிறைய நல்ல விஷயங்களை இத்திரைப்படத்தில் சொல்லி இருக்கிறோம்'' என்றார்.

டைரக்டர் தங்கர்பச்சான் பேசும்போது, "சாதிய பாகுபாடுகள் தற்போது ஊரில் இல்லை என்று சொல்ல முடியாது. அதற்கு உயிர் கொடுப்பவர்கள் அதிகாரத்தை பெற விரும்புகிறார்கள். திரைப்படங்கள் பிரிவினையை உண்டுபண்ணாமல் சமூகத்தை இணைக்க வேண்டும். நானும், சேரனும் சினிமா மூலம் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்துவிட முடியுமா என்று போராடிக்கொண்டு இருக்கிறோம்'' என்றார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு