சினிமா செய்திகள்

நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகை நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா 'கனெக்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

'கனெக்ட்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும். கனெக்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது. கனெக்ட் திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'கனெக்ட்' திரைப்படத்தின் டிரைலர் இன்று (டிசம்பர் 9) நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. தெலுங்கு டிரைலரை நடிகர் பிரபாசும், தமிழ் டிரைலரை இயக்குனர் விக்னேஷ் சிவனும் தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்