சினிமா செய்திகள்

கொரோனா பாதித்த ஒடிசாவின் பிரபல இளம்பாடகி மரணம்

ஒடிசாவில் கொரோனா பாதித்த பிரபல பின்னணி பாடகி தபு மிஷ்ரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.

தினத்தந்தி

புவனேஸ்வர்,

ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகியாக இருந்தவர் தபு மிஷ்ரா. இந்தி, வங்காள மற்றும் பிற மொழிகளிலும் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், அவரது ஆக்சிஜன் அளவு 45க்கும் கீழ் குறைந்தது. இதனால் வீட்டு தனிமையில் இருந்த அவரை தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர். 100% வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுபற்றி, அவருக்கு ரத்த கொதிப்பு அல்லது வேறு வகையான இணை நோய்கள் எதுவும் இல்லை. அவர் குணமடைந்து விடுவார் என நம்பிக்கை உள்ளது. ஆனால் கடந்த 2 நாட்களாக அவருக்கு அளிக்கும் சிகிச்சையை அவர் ஏற்கவில்லை. தீவிர நிலையில் உள்ளார் என அவரது சகோதரி துருதி தீபா மிஸ்ரா நேற்று கூறினார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளார். தபு மிஷ்ராவின் தந்தை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், 9 நாட்கள் கழித்து அவர் உயிரிழந்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு