சினிமா செய்திகள்

10 நிமிட காட்சிக்கு பல கோடி ரூபாய் செலவில் டி-ஏஜிங் தொழில்நுட்பம்... வெளியான 'தளபதி 68' படத்தின் அப்டேட்..!

'தளபதி 68' படத்தில் நடிகர் விஜய்யை இளமையாக காட்ட டி-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை,

'லியோ' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். 'தளபதி 68' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் பாடலாசிரியராக மதன் கார்க்கி இணைந்துள்ளார். இந்நிலையில் விஜயதசமி அன்று படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தற்போது துருக்கி புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 'தளபதி 68' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த படத்தில் நடிகர் விஜய்யை இளமையாக காட்ட டி-ஏஜிங் (DE-AGEING) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் வெறும் 10 நிமிடம் வரும் பிளாஷ் பேக் காட்சிக்காக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதற்காக ரூ.6 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்