சென்னை,
கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான பாலிவுட் படம் 'தே தே பியார் தே 2'. இத்திரைப்படத்தில் அஜய் தேவ்கன், ரகுல் பிரீத் சிங் மற்றும் மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அன்ஷுல் சர்மா இயக்கியுள்ள இந்தப் படம், முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் கவனத்தை ஈர்த்தது.
முதல் நாளில் இப்படம் சுமார் ரூ. 9.45 கோடி வசூலை எட்டியது. 2-ம் நாளில் இன்னும் வேகம் பெற்றிருக்கிறது. இரண்டாம் நாளில் கிட்டத்தட்ட ரூ. 13.77 கோடி வசூலைத் தொட்டுள்ளது. மொத்தம் இப்படம் 2 நாட்களில் ரூ. 23.22 கோடி வசூலித்திருக்கிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், முதல் இரண்டு நாட்களை விட வசூல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை லவ் ரஞ்சன் மற்றும் தருண் ஜெயின் எழுதியுள்ளனர், மேலும் ஜாவேத் ஜாப்ரி, மீசான் ஜாப்ரி மற்றும் சிலர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
View this post on Instagram