சினிமா செய்திகள்

இத்தாலியில் நடக்கிறது தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் திருமணம்

தீபிகா படுகோனே இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருந்தார். ராணி பத்மாவதி வேடத்தில் நடித்த பத்மாவத் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து வசூல் பார்த்தது. அவரது நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. அதோடு கொலை மிரட்டல்களும் வந்தன.

தீபிகா படுகோனேவும் பத்மாவத் படத்தில் வில்லனாக நடித்து இருந்த ரன்வீர்சிங்கும் இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களும் அடிக்கடி வெளிவந்தன. ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதம் தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திருமணம் இத்தாலியில் நடக்க இருப்பதாக இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் அங்குதான் திருமணம் நடந்தது. ரன்வீர் சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா துறை தூதுவராக இருக்கிறார். எனவே அங்குள்ள அரசாங்கம் தங்கள் நாட்டில் வந்து திருமணம் செய்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் தீபிகா படுகோனே இத்தாலியை தேர்வு செய்துள்ளார். அங்குள்ள அரசும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளது என்கிறார்கள். இத்தாலியில் திருமணத்தை முடித்து விட்டு மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளனர். திருமணம் ஆனதும் தங்குவதற்காக மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் 2 தளங்கள் உள்ள ஆடம்பர வீட்டை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.

இந்த வீட்டில் தற்போது ரன்வீர்சிங் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்