சினிமா செய்திகள்

ஜப்பானிலும் அடியெடுத்து வைக்கும் தனுஷின் ‘குபேரா’ - ஏப்ரலில் ரிலீஸ்

ஜப்பானில் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘குபேரா’ படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பிச்சைக்காரராக தனுஷின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது.

இந்நிலையில், இந்த படம் இந்தியாவை தாண்டி ஜப்பானில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் சரியான ரிலீஸ் தேதி மற்றும் புரமோஷன் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இப்படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தானா, ஜிம் சர்ப், சாயாஜி ஷிந்தே, சுனைனா, தலீப் தாஹில், ஹரீஷ் பேரடி, ஸ்ராவணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.