சினிமா செய்திகள்

அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.20 கோடி கேட்டாரா நயன்தாரா?

டாக்சிக் படத்தில் யாஷின் அக்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

நயன்தாரா 'ஜவான்' படத்தில் நடித்து பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து பல மொழிகளில் இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன. தற்போது தமிழில் 'டெஸ்ட்', 'மண்ணாங்கட்டி' படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில்தான் 'மண்ணாங்கட்டி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. டியர் ஸ்டூடன்ட்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் கே.ஜி.எப் படத்தில் நடித்து பிரபலமான யாஷ் நடிப்பில் அதிக செலவில் பிரமாண்டமாக தயாராக உள்ள 'டாக்சிக்' படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தில் யாஷின் அக்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம் பரபரப்பான விஷயமாக மாறி இருக்கிறது. அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ரூ.20 கோடி கேட்டதாக தெரியவந்துள்ளது.

இதுவரை ஒரு படத்துக்கு ரூ.10 கோடிவரை சம்பளம் பெற்று வந்த நயன்தாரா தற்போது அதனை இரு மடங்கு உயர்த்தி கேட்டது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்கலாமா? வேண்டாமா என்று படக்குழுவினர் யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்