சினிமா செய்திகள்

“2-3 ஆண்டுகளில் விவாகரத்து… நண்பர்களை பார்த்து பயந்தேன்” - நடிகை திவி வாத்யா

திருமணம் குறித்த நடிகை திவி வாத்யாவின் கருத்து சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை திவி வாத்யா . பிக் பாஸ் தெலுங்கின் 4வது சீசனில் பங்கேற்ற அவர் சில நாட்கள் மட்டுமே உள்ளே இருந்தார். இருப்பினும், அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இவர் ’லம்பசிங்கி` , `கேப் ஸ்டோரீஸ்` , `புஷ்பா 2`, `சிம்பா`, `ருத்ரங்கி`, `ஜின்னா`, `நயீம் டைரிஸ்`, `காட்பாதர்`, `டாக்கு மகாராஜ்` போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், திருமணம் குறித்த திவி வாத்யாவின் கருத்து சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் திவி , திருமணம் குறித்த தனது பயத்தை வெளிப்படுத்தினார். திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார்.

தனது நட்பு வட்டத்தில் உள்ள திருமணமானவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பிரிந்துவிட்டதாகவும், அவர்களைப் பார்க்கும்போது, ​​திருமணம் தன்னை பயமுறுத்துவதாகவும் கூறினார். திருமணத்திற்குப் பிறகு பலர் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் இழப்பதாகவும் கூறினார்.

திவியின் இந்த கருத்துக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி