சினிமா செய்திகள்

இந்த ’சிங்கம்’ பட வில்லனை நினைவிருக்கிறதா? - இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? - வைரலாகும் புகைப்படங்கள்

‘சிங்கம் 2’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்த டேனி கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

சென்னை,

தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு உருவான படங்களில் ஒன்று ‘சிங்கம்’. சூர்யா ஹீரோவாக நடித்த இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. சூர்யாவின் நடிப்பு இந்த படத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்றதாகவே கூறலாம்.

ஹரி இயக்கிய இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘சிங்கம் 2’, ‘சிங்கம் 3’ ஆகியவை வெளியாகி வசூலில் சாதனை படைத்தன. குறிப்பாக ‘சிங்கம் 2’ பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இந்த படங்களில் அனுஷ்கா கதாநாயகியாக நடித்தார். இரண்டாம் பாகத்தில் ஹன்சிகா, மூன்றாம் பாகத்தில் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்நிலையில், ‘சிங்கம் 2’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்த டேனி கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. போதைப்பொருள் மாபியா தலைவராக அவர் நடித்த விதம் ரசிகர்களை கவர்ந்தது.

டேனியின் இயற்பெயர் டேனி சபானி. லண்டனில் பிறந்து வளர்ந்த அவர் ‘தி பில்’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ‘பெட்வின் தி லைன்ஸ்’, ‘கசுவாலிட்டி’, ‘ஹால்பி சிட்டி’ போன்ற பல தொடர்களில் நடித்தார். ‘ஹோட்டல்’ என்ற ஹாலிவுட் திரில்லர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து ‘சாங் பார் அ ரஹ்ஹி பாய்’, ‘தி ஆக்ஸ்போர்டு மர்டர்ஸ்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களிலும் நடித்தார்.

இந்திய திரையுலகில் ‘சிங்கம்’ படத்தின் மூலம் அறிமுகமான டேனி, பின்னர் கன்னடத்தில் ‘தாரகாசுரா’ படத்திலும் நடித்தார். தற்போது அதிகப்படங்களில் நடிக்காத நிலையில், அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முன்பு கிளீன் ஷேவ் தோற்றத்தில் இருந்த அவர், தற்போது முழு தாடியுடன் முற்றிலும் மாறுபட்ட லுக்கில் காணப்படுகிறார்.