சினிமா செய்திகள்

துல்கர் சல்மான்-காஜல் அகர்வாலின் 'தோழி' பாடல் வெளியானது

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் 'ஹே சினாமிகா' படத்தின் பாடல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடன பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் மதன் கார்க்கி எழுதி துல்கர் சல்மான் பாடிய பாடல் ஒன்றும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் இருவரின் நட்பைக் கொண்டாடும் வகையிலான தோழி என்ற பாடல் வெளியாகி உள்ளது.

மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலை பிரதீப் குமார் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ஹே சினாமிகா திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு