சினிமா செய்திகள்

ஈஷா ரெப்பாவின் புதிய படம்...டிரெய்லரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

இப்படத்தில் தருண் பாஸ்கர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

தினத்தந்தி, Muthulingam Basker

சென்னை,

இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என பன்முகத் திறன் கொண்ட தருண் பாஸ்கர், தற்போது ஒரு கிராமப்புற நகைச்சுவை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஈஷா ரெப்பா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் ஏ.ஆர். சஜீவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ருஜன் யாரபோலு, ஆதித்யா பிட்டி, விவேக் கிருஷ்ணானி, அனுப் சந்திரசேகரன், சாதிக் ஷேக் மற்றும் நவீன் சனிவரபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்திற்கு ''ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி'' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற 30-ம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட பாடல்கள் , டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார். டிரெய்லரில் தருண் பாஸ்கர் மற்றும் ஈஷா ரெப்பா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்