சினிமா செய்திகள்

பிரபல டைரக்டர் மரணம்

பிரபல மலையாள டைரக்டர் அசோகன் என்ற ராமன் அசோக் குமார் கொச்சியில் மரணம் அடைந்தார்.

இவர் சமீபத்தில் சிங்கப்பூர் சென்று விட்டு கேரளாவுக்கு திரும்பியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. டைரக்டர் அசோகன் 1989-ல் வர்ணம் படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார். தொடர்ந்து சந்திரம், மூக்கிலா ராஜ்யத்து, ஆச்சார்யன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை டைரக்டு செய்தார். கனபுரங்கள் என்ற தொலைக்காட்சி தொடரையும் இயக்கி உள்ளார்.

கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். டைரக்டர் அசோகன் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு