சினிமா செய்திகள்

கின்னஸ் சாதனைக்காக ஒருவர் நடித்துள்ள படம்

தினத்தந்தி

இயக்குனரும், நடிகருமான ஜி.சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ள படம் `ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா'.

இந்த படம் குறித்து ஜி.சிவா கூறும்போது,``ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்துள்ள படங்கள் ஏற்கனவே நிறைய வந்துள்ளன. ஆனால் முழுக்க கமர்ஷியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் திரைக்கதையை ஒரே கதாபாத்திரத்தின் கோணத்தில் சொல்ல விரும்பி இந்த படத்தை உருவாக்கி உள்ளேன்.

கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி நிறைவு செய்தோம். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. ஒரே நடிகர் நடித்து இருந்தாலும் கமர்சியலாக இருக்க அதிரடி சண்டை காட்சிகளையும் படத்தில் வைத்து இருக்கிறேன்.

இந்த படம் தமிழ் சினிமாவில் புது முயற்சி. படத்தை கின்னஸ் சாதனைக்கு அனுப்ப விண்ணப்பித்திருக்கிறோம். அவர்கள் கேட்ட தகவல்களையும், காணொளிகளையும் அனுப்பி இருக்கிறோம்'' என்றார். ஒளிப்பதிவு: ஓகி ரெட்டி சிவக்குமார், அருண் சுசில், இசை:மணிசேகரன் செல்வா. தயாரிப்பு: பாலா ஞானசுந்தரம்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு