சினிமா செய்திகள்

படம் வெற்றி - தோல்வியை தீர்மானிக்க முடியாது - நடிகை பூஜா ஹெக்டே

தினத்தந்தி

தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. கடந்த வருடம் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்துள்ளன. தற்போது மகேஷ்பாபு ஜோடியாக ஒரு படத்திலும், சல்மான்கான் ஜோடியாக கிசிகா பாய் கிசிகா ஜான் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், "எல்லா படங்களிலுமே கஷ்டப்பட்டு உழைக்கிறோம். ஆனால் அவற்றின் வெற்றி-தோல்வியை நம்மால் தீர்மானிக்க முடியாது. வெற்றி-தோல்வி என்பது ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இது எனக்கு திருப்தியை கொடுத்துள்ளது. எனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நடிக்க முயற்சி செய்கிறேன். என்னால்கூட பக்கத்து வீட்டுப்பெண் மாதிரி காட்சி அளிக்க முடியும். அதேபோல மாடர்ன் பெண்ணாகவும் நடிக்க முடியும். சரித்திர காலத்து நடிகையாகவும் நடிப்பேன். எனக்கு தெய்வ பக்தி அதிகமாக இல்லை. ஆனால் நம்மையெல்லாம் ஏதோ ஒரு பலமான சக்தி முன்னோக்கி நடத்துகிறது என்று மட்டும் நம்புவேன்'' என்றார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்