சென்னை,
நடிகர் விஜயின் அழகிய தமிழ் மகன் பட தயாரிப்பாளர் சுவர்க சித்ரா அப்பச்சனுக்கு பண மோசடி வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அழகிய தமிழ் மகன் படத்தை வெளியிட விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரிடம் ஒரு கோடி பெற்று மோசடி செய்ததாக எஸ் ஏ சந்திரசேகர் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் பட தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.