சினிமா செய்திகள்

கவுதம் கார்த்திக் நடித்துள்ள '1947, ஆகஸ்ட் 16' படத்தின் டிரைலர் வெளியானது..!

கவுதம் கார்த்திக் நடித்துள்ள '1947, ஆகஸ்ட் 16' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், 'ஏ.ஆர் முருகதாஸ் புரொடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் கவுதம் கார்த்திக் நடித்துள்ள '1947, ஆகஸ்ட் 16' திரைப்படத்தை ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரியுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாசிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. '1947, ஆகஸ்ட் 16' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 7-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு