சினிமா செய்திகள்

நடிகர் நிவின் பாலி நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது...!

இயக்குனர் ராம் 'ஏழு கடல் ஏழு மலை' எனும் படத்தை இயக்கியுள்ளார்.

சென்னை, 

'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் ராம். தற்போது இவர்  'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் நிவின் பாலியை வைத்து 'ஏழு கடல் ஏழு மலை' எனும் படத்தை இயக்கியுள்ளார்.இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மாநாடு' படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்

கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்