சினிமா செய்திகள்

சுருதி ஹாசன் நடனத்தில் 'பெத்தி' பட பாடல் வெளியீடு

இந்த படம் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. புச்சி பாபு சனா இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் ஜூன் 4ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சுருதி ஹாசன் நடனமாடியுள்ள ‘ஹெல்லல்லல்லோ’ பாடல் வெளியாகியுள்ளது.

அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.