சென்னை
தர்பார் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் ரஜினிகாந்த், கடந்த 13ந் தேதி இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு முன்னதாக தன்னை புத்துணர்ச்சி அடையச் செய்யும்விதமாகவும் ஆன்மிகப் பயணமாகவும் ரஜினி இமயமலை சென்றதாக கூறப்படுகிறது. ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் ரஜினி தியானம் மேற்கொண்டார்.
பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய பகுதிகளுக்கு சென்ற ரஜினி அங்குள்ள ஆலயங்களில் வழிபட்டு, தியானம் மேற்கொண்டார். ஒருவார சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நள்ளிரவில் சென்னை திரும்பிய அவர், தமது பயணம் நன்றாக இருந்ததாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால் எதற்கும் பதில் அளிக்காமல் இமயமலை பயணம் நன்றாக இருந்ததாக கூறிவிட்டு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.