சினிமா செய்திகள்

எனது வாழ்க்கையில் நிறைய விமர்சனங்களைப் பார்த்துவிட்டேன்- நடிகை பவ்யாதிரிகா

வடமாநில பெண் போல தோற்றமளிக்கும் பவ்யாதிரிகா, சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.

சென்னை,

கதிர்', ஜோ', இடி மின்னல் காதல்', பன் பட்டர் ஜாம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், பவ்யாதிரிகா. வடமாநில பெண் போல தோற்றமளிக்கும் பவ்யாதிரிகா, சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.

பால் நிற மேனி கொண்ட நடிகையாய் சுற்றி வரும் பவ்யாதிரிகாவிடம், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பலம், பலவீனம் என்ன?' என்று கேட்கப்பட்டது. பலம் நிறைய இருக்கிறது. அதேபோல பலவீனமும் அதிகம் இருக்கிறது. அதை வெளியே சொல்லக்கூடாது'', என்றார்.

மேலும் அவர் கூறும்போது, எனது வாழ்க்கையில் நிறைய விமர்சனங்களைப் பார்த்துவிட்டேன். ஆனாலும் விமர்சனங்களைக் கண்டு வருத்தம் கொண்டதில்லை. ஒருத்தன் வளர்கிறான் என்றால் அதற்கு காரணம் விமர்சனங்களாகவே இருக்கும்.

என்னை பற்றி எனக்கும் தெரியும் என்பதால், எதுவும் என் மனதை பாதித்தது கிடையாது. பணத்துக்காக, புகழுக்காக சினிமாவுக்கு வரவில்லை. சினிமா எனக்கு ஒரு வேள்வி மாதிரி, தவம் போல'', என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்