சினிமா செய்திகள்

"நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்த முடிவுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்"- நடிகர் பாக்யராஜ்

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்த முடிவுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்று நடிகர் பாக்யராஜ் கூறினார்.

சென்னை,

உலக சிறுநீரக தினத்தையொட்டி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபயண விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் பாக்யராஜ்கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் பாக்யராஜ் கூறுகையில்,

நடிகர் சங்க தேர்தல் ஓட்டுகள் எண்ணிக்கை வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்டு நியாயமான முறையில் எந்த முடிவுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். அதற்கு தயாராக உள்ளேன்.

குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 23.6.2019 அன்று நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவு எப்போது? என்பது பற்றி, அடுத்து வரும் நாட்களில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு