சினிமா செய்திகள்

'கவர்ச்சி வேடங்களில் இனி நடிக்க மாட்டேன்' - நடிகை நமீதா

கவர்ச்சி வேடங்களில் இனி நடிக்கப் போவதில்லை என நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாடம்பாக்கத்தில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை நமீதா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது மீண்டும் நடிப்பு பணியை தொடர்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஒரு படத்தில் வில்லியாக தற்போது நடித்து வருகிறேன். இனி நூறு சதவீதம் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன். தொடர்ந்து சின்னத்திரை, வெப் தொடர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் என்னை பார்க்கலாம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது