சினிமா செய்திகள்

தெலுங்கர்கள் இல்லை என்றால், தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும் - நடிகர் ராதாரவி

தெலுங்கர்கள் இல்லை என்றால், தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும் என்றும் தாம் தெலுங்கர் என்பதில் பெருமை கொள்வதாகவும் நடிகர் ராதாரவி கூறினார்.

சென்னை,

நடிகர் எம்.ஆர்.ராதாவின் 40-வது ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி பேசும்போது கூறியதாவது;-

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கர்களின் பங்களிப்பு அளப்பறியது. தெலுங்கர்கள் இல்லை என்றால், தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும். தாம் தெலுங்கர் என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் சினிமாவில் பாதிக்கும் மேற்பட்டோர் தெலுங்கர்களே உள்ளனர்.

திராவிட இயக்க வளர்சிக்காக பாடுபட்ட எனது தந்தை எம்.ஆர்.ராதாவை, அந்த இயக்கங்களில் மறந்துவிட்டனர் என்றும் தமது இனத்தை சேர்ந்த தெலுங்கர்கள் தான் அவரை நினைவுகூர்ந்து விழாக்கள் எடுப்பதாகவும் கூறினார்.

ராதாரவியின் தமிழர், தெலுங்கர் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாரவியின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்றும் கூறி உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்