சினிமா செய்திகள்

'எனக்கு தொப்பை வந்துவிட்டது'- லட்சுமிமேனன் கவலை

படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் லட்சுமிமேனன் அவ்வப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரீல்ஸ் வீடியோ பதிவேற்றி வருவார்.தற்போது இவர் பதிவேற்றிய வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.தனக்கு தொப்பை போட்டுவிட்டதாக கூறி நடிகை லட்சுமி மேனன் வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே, சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வந்தவர், லட்சுமிமேனன். இவர் தமிழில் 'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். 'கும்கி', 'குட்டிப்புலி', 'பாண்டியநாடு', 'நான் சிகப்பு மனிதன்', 'மஞ்சப்பை', 'ஜிகர்தண்டா', 'வேதாளம்', 'மிருதன்', 'ரெக்க' ஆகிய படங்களிலும் நடித்தார்.2016-ம் ஆண்டுக்கு பிறகு அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு, தனது படிப்பில் கவனம் செலுத்த சென்றுவிட்டார். 5 வருட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'புலிக்குத்தி பாண்டி' என்ற படத்தில் நடித்தார். தற்போது 'சிப்பாய்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லட்சுமி மேனன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'தனக்கு தொப்பை வந்துவிட்டது', என்றும் தெரிவித்து இருக்கிறார். ஆனாலும் 'எப்போதுமே நீங்கள் அழகுதான்' என்று ரசிகர்களும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு