சினிமா செய்திகள்

தமிழ், தெலுங்கு, இந்தியில் ஷங்கர் இயக்கும் 3 புதிய படங்கள்

‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுடன் சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தமிழ் திரையுலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவரான ஷங்கர், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை டைரக்டு செய்து வந்தார். தேர்தல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது படப்பிடிப்பை தொடர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை அடுத்து ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தை டைரக்டு செய்ய ஷங்கர் முடிவு செய்து இருக்கிறார். பிரபல தெலுங்கு பட அதிபர் தில்ராஜு தயாரிக்கிறார்.

தெலுங்கு படம் முடிந்ததும், அந்நியன் படத்தை இந்தியில் உருவாக்க ஷங்கர் திட்டமிட்டு இருக்கிறார். விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில், ரன்பீர் கபூர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு