சினிமா செய்திகள்

கோலமாவு கோகிலா’ படத்தில் “நயன்தாராவுக்கு ஜோடி இல்லை”

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ஜோடி இல்லை என்று டைரக்டர் நெல்சன் கூறினார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விரும்பும் நயன்தாராவுக்கு, அறம் படத்தின் வெற்றி, தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அவர், கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பற்றி அதன் டைரக்டர் நெல்சன் கூறியதாவது:-

இது, கடத்தல் தொழிலை பற்றிய கதை. இந்த படத்தில், ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நயன்தாரா வருகிறார். அம்மா, அப்பா, தங்கை என்று ஒரு குடும்பத்தை தாங்கி பிடிக்கும் பெண்ணாக நடிக்கிறார். அவருடைய அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், அப்பாவாக ஆர்.எஸ்.சிவாஜி, தங்கையாக ஜாக்குலின் ஆகியோர் வருகிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில், சரவணன் நடிக்கிறார்.

படத்தில், நயன்தாராவுக்கு ஜோடி இல்லை. அவரை ஒருதலையாக காதலிப்பவராக யோகி பாபு நடித்து வருகிறார். கதையை கேட்டதுமே நயன்தாரா நடிக்க சம்மதித்தார். படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். அவருடைய இசையில், சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் என்கிறார், டைரக்டர் நெல்சன்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்