சினிமா செய்திகள்

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மும்பை:

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது.

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடு மற்றும் மும்பையில் இருக்கக்கூடிய அலுவலகம் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது.மும்பை மற்றும் புனே நகர்களில் உள்ள 20 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனையின் முடிவில் ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்லவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டோம் பிலிம்ஸ் மற்றும் குவான் ஆகிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும், வருவாயை மறைத்துள்ளதாகவும் வருமான வரித்துறைக்கு புகாகள் வந்தன. அந்தப் புகாகளின் அடிப்படையில் இரு நிறுவனங்களுடன் தொடர்புடைய நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்ப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது.

இயக்குநர் அனுராஜ் காஷ்யப், இயக்குநர் விக்ரமாதித்யா, தயாரிப்பாளர் மது மண்டேனா, விகாஷ் பால் ஆகிய நால்வரும் இணைந்து 2011-ல் பாண்டோம் ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். எனினும் கடந்த அக்டோபர் 2018-ல் இந்த நிறுவனம் மூடப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்