சினிமா செய்திகள்

எம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா; காங்கிரஸ் எம்.எல்.ஏவும் பாதிப்பு

மாண்டியா தொகுதியின் எம்.பி.யும், நடிகையுமான சுமலதாவும், குனிகல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியை சேர்ந்த எம்.பியும் மறைந்த நடிகரும்-அரசியல்வாதியுமான அம்பரீஷின் மனைவியுமான சுமலதா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதை தொடர்ந்து லேசான அறிகுறிகள் இருப்பதால் தன்னை தனிமை படுத்தி கொண்டதாக் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

சுமலாதா தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் மாண்டியாவில் பாஜனதாவின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக சுமலதா வெற்றி பெற்றார்.

தற்செயலாக, அதே நாளில், மாநிலத்தின் குனிகல் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் எச்.டி.ரங்கநாத் கொரோனா பாதிப்பால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதுபோல் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பி.ஜனார்த்தனா பூஜாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு