சினிமா செய்திகள்

நடிகர் மன்சூர் அலிகானிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

மன்சூர் அலிகான் அளித்த வாக்குமூலத்தை வீடியோ பதிவாகவும், எழுத்த பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இன்று ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மன்சூர் அலிகானிடம் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை காண்பித்து 35 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றது. அதில், உண்மையிலேயே தவறான நோக்கத்தில் தான் பேசினாரா என்பது தெடர்பாக மன்சூர் அலிகானிடம் விசாரணை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், மன்சூர் அலிகான் அளித்த வாக்குமூலத்தை வீடியோ பதிவாகவும், எழுத்த பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு