சினிமா செய்திகள்

நடிகை திஷா பதானியுடன் காதலா? பாடகர் தல்வீந்தர் ‘மழுப்பல்’ பதில்

திஷா பதானியும் பிரபல பாடகர் தல்வீந்தரும் காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்த திஷா பதானி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில், திஷா பதானியும் பிரபல பாடகர் தல்வீந்தரும் காதலித்து வருவதாகவும், இருவரும் பல இடங்களில் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த வதந்திகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தல்வீந்தர், “நாங்கள் ஒருவரையொருவர் சோதனை செய்து வருகிறோம். வதந்திகளை பலர் பரப்பி வருகிறார்கள். அவை வதந்திகளாகவே இருக்க நான் அனுமதிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும், “திஷாவை காதலிக்கிறீர்களா, இல்லையா?” என்ற கேள்விக்கு, “நான் ஒவ்வொரு நாளும் காதலிக்கிறேன். இப்போதும் காதலிக்கிறேன்” என பதிலளித்தார். இதன் மூலம் திஷா பதானியுடன் காதல் உறவு உள்ளதா என்பதைக் குறித்து உறுதியாகக் கூறாமல், ஏற்கவும் மறுக்கவும் செய்யாத வகையில் தல்வீந்தர் மழுப்பலாக பதிலளித்ததாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.