சென்னை,
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இணையதளத்தில் கசிந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் விவாவத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பு நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கசிந்த திரைப்படத்தை பதிவிட்ட இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
இணையதளங்கள், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை முடக்கிய தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸார், படத்தை லீக் செய்த நபர்களை கண்டறியும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.