சினிமா செய்திகள்

சைக்கோவுடன் மோதும் ஜெயம் ரவி

தினத்தந்தி

ஜெயம் ரவி நடித்துள்ள புதிய படம் `இறைவன்'. இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். ராகுல்போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், சார்லி, விஜயலட்சுமி, வினோத் கிஷன், அழகம்பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஐ.அஹமத் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே `வாமனன்', `என்றென்றும் புன்னகை', `மனிதன்' ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

`இறைவன்' படம் பற்றி அவர் கூறும்போது, ``படத்தில் ஜெயம்ரவி போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த போலீஸ் வேடங்களில் இருந்து இது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். ஜெயம் ரவிக்கு இணையாக திருப்புமுனை கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடித்து இருக்கிறார். ராகுல் போஸ் குரூர வில்லனாக வருகிறார்.

நகரில் இளம் பெண்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுகின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் சைக்கோ கொலையாளியை பிடிக்கும் பொறுப்பு ஜெயம் ரவி வசம் வருகிறது. இதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகளும், கொலையாளி சிக்கினானா? என்பதும் கதை'' என்றார். இசை: யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு: ஹரி கே.வேதாந்த்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை