சினிமா செய்திகள்

சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற ஜோதிகா

2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த 4ம் தேதி தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் பட்டியலை வெளியிட்டது.இந்த நிலையில் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் மொத்தம் 39 விருதுகள் வழங்கப்ட்டன . கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி கவனத்தை ஈர்த்த படங்கள் மற்றும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் '36 வயதினிலே' திரைப்படத்திற்கு சிறந்த நடிகை உள்ளிட்ட ஏழு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் நடித்த ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதை நேரில் பெற்றுக் கொண்டார்.

'36 வயதினிலே' எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம், விருது எப்போ கிடைச்சாலும் சந்தோஷம்தான்" என்று ஜோதிகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது