சினிமா செய்திகள்

கமல், நயன்தாரா படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்–2’ படம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10–ந் தேதி திரைக்கு வருகிறது.

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படமும் அதே நாளில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். ஒரே நாளில் இருவர் படங்களும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

விஸ்வரூபம்2 படத்தை கமல்ஹாசனே டைரக்டு செய்து கதாநாயகனாகவும் நடித்துள்ளார். பூஜா குமார், ஆண்ட்ரியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ராகுல்போஸ், சேகர் கபூர் ஆகியோரும் உள்ளனர். இது விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

கோலமாவு கோகிலா படத்தில் கதாநாயகன் இல்லை. நயன்தாரா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளனர். நெல்சன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தில் குடும்ப வறுமையை போக்க போதை மருந்து கடத்தும் பெண்ணாக நயன்தாரா நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. அவரை ஒருதலையாக காதலிப்பவராக யோகிபாபு வருகிறார். நகைச்சுவை, திரில்லர் படமாக உருவாகி உள்ளது.

போதை மருந்து விஷயம் இருப்பதால் படத்துக்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் அளிக்க மறுத்து யுஏ சான்று அளித்து இருக்கிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்