சினிமா செய்திகள்

கன்னட நடிகை தற்கொலை முயற்சி

கன்னட நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தினத்தந்தி

கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா. இவர் உப்பு ஹூலி ஹாரா, கன்னட் கொத்தில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் ஜெயஸ்ரீக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சில தினங்களுக்கு முன்பு முகநூல் பக்கத்தில் மன அழுத்தத்தால் இந்த உலகத்தை விட்டு போக முடிவு செய்துள்ளேன் என்று பதிவிட்டார். இது பரபரப்பானது. அவருக்கு பலரும் ஆறுதல் கூறினார்கள். மீண்டும் அவர் விளம்பரத்துக்காக இதை சொல்லவில்லை அதிக மனஅழுத்தத்தில் இருக்கிறேன். அதனால்தான் சாக முடிவு செய்து இருக்கிறேன். எனக்கு பண கஷ்டம் இல்லை. பல வழிகளில் துரோகத்தை சந்தித்து இருக்கிறேன் என்று பேசி ஒரு வீடியோ வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியிலும் பட உலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் சுதீப் தலையிட்டு ஜெயஸ்ரீயை காப்பாற்றி உள்ளார். இதுகுறித்து ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள பதிவில் என்னை காப்பாற்றிய சுதீப்புக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு