பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ், இவர் தமிழில் ரஜினிகாந்துடன் தாய் மீது சத்தியம், பிரியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அம்பரீஷின் மனைவியான சுமலதாவும் முன்னணி நடிகை ஆவார். இவரும் தமிழில் திசை மாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அம்பரீஷ் கடந்த 2018-ல் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோவில் மணிமண்டபம் கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து இருந்தது. தற்போது மணி மண்டபத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளன.
மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். அவர் பேசும்போது அம்பரீசுக்கும், எனக்கும் 40 ஆண்டுகால நட்பு இருந்தது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கும் விரைவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்றார்.