சினிமா செய்திகள்

கதிர் நடித்துள்ள 'யூகி' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் கதிர் நடித்துள்ள 'யூகி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ள திரைப்படம் 'யூகி'. மேலும் இந்த படத்தில் நடராஜன் சுப்பிரமணியம், நரேன், பவித்ர லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். ஜோமின் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ்-மலையாளம் உள்ளிட்ட இருமொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது 'யூகி' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வருகிற 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்