சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

துல்கர் சல்மான் நடித்துள்ள 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கின்றனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். 'செகண்ட் ஷோ' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான துல்கர் சல்மான், தற்போது திரையுலகில் பதினொரு வருடங்களை நிறைவு செய்கிறார்.

இந்த நிலையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்